சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
போற்றித் திருக்கலி வெண்பா

Back to Top
நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
11.016   போற்றித் திருக்கலி வெண்பா  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.016 போற்றித் திருக்கலி வெண்பா   ( )
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த

[1]
குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து

[2]
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி அன்றியும்

[3]
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள்

[4]
காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும்

[5]
பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் காண

[6]
வரத்திற் பெரிய வலிதொலையக் காலன்
உரத்தில் உதைத்தவுதை போற்றி கரத்தான்மே

[7]
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் பொற்புடைய

[8]
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி தூமப்

[9]
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்

[10]
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தவடர் போற்றி நடுங்கத்

[11]
திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற

[12]
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப்

[13]
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் வீரம்

[14]
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து

[15]
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த

[16]
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி அத்தகைத்த

[17]
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக்

[18]
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து

[19]
வாலுகத்தால் மாவிலங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங்

[20]
கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண்

[21]
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி நிற்க

[22]
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச்

[23]
சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி அக்கணமே

[24]
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த

[25]
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்

[26]
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப்

[27]
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரமன் றளித்தவலி போற்றி புரமெரித்த

[28]
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று

[29]
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி விடைகாவல்

[30]
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் கோனவனைச்

[31]
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி மேனாள்

[32]
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் துதித்தங்

[33]
கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி கவைமுகத்த

[34]
பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி நிற்பால

[35]
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி விம்மி

[36]
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி தொடுத்தமைத்த

[37]
நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் தோள்மாலை

[38]
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி

[39]
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசையா உடல்திரியா நின்று வசையினால்

[40]
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால்

[41]
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி
ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் தூயசீர்க்

[42]
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல்

[43]
காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோ

[44]
டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.
[45]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool